தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: திருச்சி எஸ்.பி வருண் குமாருக்கு டிஐஜியாக பதவி உயர்வு! | 56 IPS officers tranferred all over TN

1345065.jpg
Spread the love

சென்னை: கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் எஸ்.பி.க்கள் உட்பட தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை (டிச.29) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கடலூர் மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிவந்த ராஜாராம் ஐபிஎஸ், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் எஸ்.பி அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சென்னை காவல்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார், கடலூர் எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிய இ.சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி ஆக இருந்த வருண் குமார், டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். மொத்தம் 7 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *