தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியது என்ன?

Dinamani2f2024 10 082f9jsdfm4c2f3.png
Spread the love

தமிழகத்தில் தொழில் துறையில் 14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று(அக். 8) காலை நடைபெற்றது.

சமீபத்தில் அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் நடந்த முதல் கூட்டம் இதுவாகும்.

தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

தமிழ்நாட்டில் மின்னணு, மென்பொருள், பாதுகாப்பு உபகரணம், மருத்துவத் துறை சார்ந்த உபகரணங்கள், மருந்துப் பொருள்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தி, மின் வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்படும் ரூ. 9,000 மோடி மதிப்பில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை மூலமாக 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு,

காஞ்சிபுரத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ. 13,180 கோடி மதிப்பில் ஏறத்தாழ 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு,

தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டத்திலும் புதிய தொழிற்சாலைகள் அமையவுள்ளது.

மொத்தம் ரூ. 38,600 கோடி மதிப்புள்ள 14 புதிய முதலீடுகளின் மூலமாக 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த புதிய தொழில் அமைப்புகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திட்டத்தின்படி என்னென்ன சலுகைகள் உள்ளதோ நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலமாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்’ என்று கூறினார்.

இதையும் படிக்க | மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! – மு.க. ஸ்டாலின் உத்தரவு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *