18–வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. முதல்நாளில் பிரதமர் மோடி உள்பட 280 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள மக்களவை உறுப்பினர்கள் இன்று(ஜூன் 25) பதவியேற்றனர்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி ஏற்றால். அவர், அரசியல் சாசன பிரதியை கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறினார்.இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார். அவர் பதவிஏற்கும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
தமிழக எம்.பி.க்கள்
இதைத்தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த கலாநிதி வீராசாமி, கனிமொழி,கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அப்போது பலரும் தமிழில் உறுதிமொழி கூறி மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஓம்பிர்லா-கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி…வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல்!
தி.மு.க.எம்.பிக்கள் ‘வளர்க முத்தழிறிஞர் புகழ்! வாழ்க தளபதி! வாழ்க தமிழ்த் திருநாடு’ ‘பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க, திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க!’ என முழக்கமிட்டனர்.