தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

Dinamani2f2024 11 082fxgasj01c2farchaana.jpg
Spread the love

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தலைமைத் தேர்தல் அலுவலராக இருந்த சத்யபிரத சாகு கால்நடைத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் பெண் தலைமைத் தேர்தல் அலுவலர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

2002 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலராகவுள்ளார்.

2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் சிறப்பையும் அர்ச்சனா பட்நாயக் பெற்றுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *