தமிழக தேர்தல்: திமுக மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு, குற்றப்பத்திரிகை வெளியீடு|Big Charge: BJP Lists ‘Scams’ Against DMK Rule

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. இதையொட்டி இன்று கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

“இன்று நான் இங்கு 8 கோடி தமிழ் சகோதர, சகோதரிகளின் வலியையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.

ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் ஊழல் மற்றும் பொறுப்பற்ற தமிழ்நாடு அரசுக்கு எதிராக இன்று இந்தக் குற்றப்பத்திரிகையை வெளியிடுகிறோம்.

இந்த குற்றப்பத்திரிகையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் திமுக மறுக்க முடியாதபடி ஆதாரபூர்வமாக உள்ளன. இதை காங்கிரஸும் மறுக்க முடியாது.

உதயநிதி, ஸ்டாலின்

உதயநிதி, ஸ்டாலின்

இந்தத் தந்தை – மகன் தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் எதிராகக் குற்றங்கள் செய்துள்ளனர்.

அவர்கள் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் செய்துள்ளனர். குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் செய்துள்ளனர். தலித்துகளுக்கு எதிராகக் குற்றங்கள் செய்துள்ளனர். இந்துக்களுக்கு எதிராகக் குற்றங்கள் செய்துள்ளனர். இளைஞர்களையும் விவசாயிகளையும் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.

ஐந்து ஆண்டுக்கால திமுக ஆட்சி “ஊழல், கொள்ளையின் சரித்திரம்’. அவர்கள் ஊழல் பேரரசைக் கட்டமைத்துள்ளனர். குறிப்பாக, மணல் கொள்ளையில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,700 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *