தமிழக நிதியமைச்சர் கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்ததுடன் முதல்வருக்கு அண்ணாமலை 6 கேள்விகள் | annamalai question to cm and answer to minister

1380247
Spread the love

சென்னை: மத்​திய அரசுக்கு தமிழக நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்த அண்​ணா​மலை, முதல்​வர் ஸ்​டா​லினுக்கு 6 கேள்வி​களை எழுப்​பி​யுள்ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 2023-24-ம் ஆண்டு சிஏஜி அறிக்​கை​யின்​படி 1,540 திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.14,808 கோடி நிதி செல​விடப்​ப​டா​மல் வீணாக்​கியது ஏன், 2023-24-ம் ஆண்டு மக்​களிடம் வசூலிக்​கப்​பட்ட மின்​சார வரி ரூ.1,985 கோடி. இதில் ரூ.507 கோடி தமிழ்​நாடு மின் உற்​பத்தி மற்​றும் பகிர்​மானக் கழக நிறு​வனத்​தின் ஒருங்​கிணைந்த நிதிக்கு செலுத்​தாமல் மடை​மாற்​றியது ஏன்?

மேலும் 2021-22 முதல் 2023-24 வரையி​லான 3 ஆண்​டு​களில் மத்​திய அரசிடம் பெற்ற ஜிஎஸ்டி இழப்​பீடுத் தொகை​யான ரூ.28,024 கோடி​யில் 10 சதவீதம், உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு வழங்க வேண்​டும் என்​பது மாநில திட்​டக்​குழு​வின் பரிந்​துரை. ஆனால், இவை வழங்​கப்​பட​வில்லை ஏன்?

தேர்​தலின்​போது 511 வாக்​குறு​தி​கள் திமுக சார்​பில் கொடுக்​கப்​பட்​டன. இவையன்றி ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் தனித்​தனி​யாக வாக்​குறு​தி​கள் கொடுக்​கப்​பட்​டது. இவற்​றில் 10 சதவீத வாக்​குறு​தி​களைக் கூட நிறைவேற்​றாமல் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை எப்​படி சந்திப்​பீர்​கள்?

ஆட்​சிக்கு வரு​வதற்கு முன்​பு, தமிழகத்​தின் கடன் சுமையை குறைப்​போம் என்று கூறி, கடந்த 4 ஆண்​டு​களில் சுமார் ரூ.5 லட்​சம் கோடி புதி​தாக

கடன் வாங்​கியது ஏன்? இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

மேலும், ஜிஎஸ்டி சீர்​திருத்​தம், சாலை திட்​டங்​கள், ரயில் திட்​டங்​கள், 100 நாள் வேலை​வாய்ப்பு திட்​டம், ஓய்​வூ​தி​யத் திட்​டம், ஜல் ஜீவன் திட்​டம், நிதி பகிர்வு உள்​ளிட்​டவை தொடர்​பாக, மத்​திய அரசுக்கு நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு எழுப்​பிய 10 கேள்வி​களுக்கு பதில் அளித்து சமூக வலை​தளத்​தில் அண்​ணா​மலை பதிவிட்​டுள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *