தமிழக மாணவர்கள் இரு மொழி கொள்கையையே விரும்புகிறார்கள்: அமைச்சர் பொன்முடி

Dinamani2f2024 09 122f8r1i57qj2fponmudi.jpg
Spread the love

சென்னை: தமிழக மாணவர்கள் இரு மொழி கொள்கையைத்தான் விரும்புகிறார்கள், விருப்பம் இருந்தால் அவர்கள் மூன்றாவது மொழியை படிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், சென்னை நகரில் உள்ள கல்லூரி முதல்வர்கள், மண்டல இணை இயக்குநர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் வரும் 23 ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடி வளாக சேர்க்கை மூலம் சேரலாம்.

பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மூலம் நடைபெறுகிற பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் போலியாக பேராசிரியர்கள் கணக்கு காட்டிய விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை பெற்ற பின்னர் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *