தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம் Sri Lanka

dinamani2F2025 08 022F8vs9h6fl2Fd75b77d7 cffc 4b94 ba63 7b736472caaf
Spread the love

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 கண்ணாடியிழைப் படகுகளில் 14 மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே இரவு படகை நிறுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரண்டு இலங்கைப் படகுகளில் வந்த 4 பேர், அவர்களது படகை கொண்டு மீனவர்கள் இருந்த படகை மோதி, இயந்திரங்களை சேதப்படுத்தி தாக்கியுள்ளனர்.

இதில், காயமடைந்த மீனவர்கள் விஸ்வநாதன், மூர்த்தி, செல்வராசு ஆகியோர் நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *