தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் ‘பிக்பாஸ்’ தினேஷ்!

Spread the love

சீரியல் நடிகர்களுக்கான சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தலில் நின்று ஒரு முறை இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

கடந்தாண்டு மீண்டும் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

சென்னையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்தைச் சந்தித்த பின் திருவில்லிபுத்தூர் சென்று கட்சியின் மாவட்டச் செயலாளர் மாரி செல்வத்திடம் உறுப்பினர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்ட தவெக வேட்பாளர்கள் சிலர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்களை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர் எனச் செய்திகள் வெளியான நிலையில் மாவட்டச் செயலாளர் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்து கொண்டிருக்கிறார்.

தினேஷிடம் பேசினோம்.

“‘நடிப்புக்காக சென்னை வந்துட்ட போதும் இன்னும் நான் ஓட்டு போடுறது ஊரில்தான். அதனாலதான் சொந்த ஊரிலிருந்தே அரசியல் பயணத்தைத் தொடங்கலாம்னு நினைச்சேன். நான் சிறுவனாக இருந்த போது என் தாத்தா ஒரு விவசாயியா இந்தப் பகுதியில் அழகர் அணை கொண்டு வர எடுத்த முயற்சியையெல்லாம் பக்கத்துல இருந்து பாத்திருக்கேன். என் உடன்பிறந்த அண்ணன் ஒரு ஈழத்து தமிழ்ப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன்னு சொல்லி அதை செய்தும் காட்டிய கொள்கை

வாதி. ஆனாலும் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியிலும் நேரடி தொடர்பு கிடையாது. முதல் தடவையா அரசியலுக்கு வர்றேன். தவெகவைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் தளபதி விஜய் சார் ஒரு தலைவனாக ஆவதற்குச் செய்த தியாகம், ஒரு எழுச்சிமிகு அரசியலை அவர் முன்னெடுக்கும் போது வரும் தடைகளைத் தாண்டி மக்களிடம் அதை கொண்டு செல்லும் கான்ஃபிடன்ஸ் ரெண்டும்தான்.

தமிழக மக்கள் நலனுக்காக தலைவர் விஜய் கண்ட அந்த தூய அரசியலமைப்பு அமையும் வரை அதற்காக உழைக்கும் பலரின் உழைப்போடு எனது உழைப்பும் தொடரும்’’ என்கிறார் தினேஷ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *