‘தமிழ்நாடு அணிக்காக அறிமுகப் போட்டியிலேயே கலக்கிய திருநெல்வேலி கிரிக்கெட் வீரர் இசக்கிமுத்து!’ |“Tirunelveli Cricketer Esakkimuthu Shines in Debut Match for Tamil Nadu Team”

Spread the love

பவர்ப்ளே முடிந்த உடனே 7 வது ஓவரை இசக்கிமுத்துவுக்கு கொடுத்தனர். வீசிய முதல் பந்திலேயே ராணாவையும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய் கோஹில் என்பவரையும் இசக்கிமுத்து வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய இசக்கி முத்து 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இசக்கிமுத்து திருநெல்வேலியின் களக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக ஆடியிருந்தார். கடைசி சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சீசன் “Emerging Bowler of the Season’ விருதையும் வென்றிருந்தார்.

இசக்கி முத்து

இசக்கி முத்து

இப்போது தமிழ்நாடு அணிக்கும் சிறப்பாக அறிமுகமாகியிருக்கிறார். வரவிருக்கும் ஐ.பி.எல் ஏலத்திலும் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட நான்கைந்து அணிகளின் ட்ரையல்ஸூக்கும் சென்று வந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *