தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் அணை ​கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம் | Duraimurugan says no dam can be built in Mekedatu without approval of tn govt

Spread the love

காட்பாடி: வேலூர் மாவட்​டம் காட்​பாடி காந்தி நகர்ப் பகு​தி​யில் உள்ள இல்​லத்​தில் நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழகத்​தின் உரிமை​யைத் தமிழக அரசு விட்​டுக்​கொடுப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் எதிர்க்​கட்​சிகள் விமர்​சனம் செய்​கின்​றனர்.

அவர்​களின் இது​போன்ற குற்​றச்​சாட்​டு​களுக்​குப் பதில் அளிக்க முடி​யாது. யார் முயற்சி செய்​தா​லும், உச்ச நீதி​மன்​றமோ அல்​லது காவிரி ஒழுங்​காற்று ஆணை​ய​மாகக்​கூட இருந்​தா​லும் தமிழக அரசின் ஒப்​புதல் இல்​லாமல் மேகே​தாட்​டு​வில் கர்​நாடக அரசால் அணை கட்ட முடி​யாது. இது தொடர்​பாக ஏற்​கெனவே விளக்​கம் கூறி​விட்​டாலும், திரும்​பத் திரும்ப பேசுவது எதற்கு என்று புரிய​வில்​லை. இவ்​வாறு துரை​முருகன் கூறி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *