இந்த நிலையில், பட்ஜெட் உரை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் பேசியதாவது:
மிகவும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்தது. பிப். 5 ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி வாக்காளர்களை குறிவைத்து தேர்தலுக்காக திட்டமிடப்பட்ட பட்ஜெட் போல் தெரிகிறது.
ரூ. 12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பின்னர், 8 – 12 லட்சம் வரை 10 சதவிகிதம் வரி வரம்பு எனத் தெரிவித்துள்ளார். இது, மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிமையானதாகவும் நேரடியாகவும் அறிவிப்பை வெளியிடவில்லை.
நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் நிதியமைச்சரால் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தாண்டு பிகார் தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மாநிலத்துக்கு மட்டும் உள்கட்டமைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அல்லது வேறெந்த தென் மாநிலங்கள் குறித்தும் ஒரு வார்த்தைகூட உரையில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.