கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், “ஒவ்வொரு கட்சியும் தங்களின் பலத்தை அதிகரிப்பதற்காக தேர்தலில் கூட்டணி வைப்பார்கள்.
நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. என்னை நம்பியுள்ள 8 கோடி மக்களுடன்தான் நான் கூட்டணி வைத்துள்ளேன். என்னுடைய வெற்றி எப்போதும் எனக்கானதல்ல. அதேபோல என்னுடைய தோல்வியும் எனக்கானதல்ல.