தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 பிரிவில் 507 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 1,820 காலியிடங்கள் என 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வை 7.93 லட்சம் போ் எழுதுகின்றனா். இதில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 74 பெண்கள், 3 லட்சத்து 9 ஆயிரத்து 841 ஆண்கள், 51 மூன்றாம் பாலினத்தவர் தோ்வெழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 763 மைங்களில் தேர்வு நடைபெற்று வருகின்றன. இந்த மையங்களில் 2, 700-க்கும் மேற்பட்ட முதன்மை கண்காணிப்பாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை தேர்வு நடைபெறுகிறது.
விரைவில் முடிவுகள்
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு நடைமுறைகள் விடியோ பதிவு செய்யப்படுகிறது. தேர்வு முடிவுள் விரைவாக வெளியிடுவதற்காக கூடுதலாக ஸ்கேனிங் இயந்திரங்கள், பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.