Last Updated:
தொழில் நிறுவனங்களில் உள்ள இயந்திரங்களை சுத்தம் செய்தும், மலர் மாலை சூட்டி, வாழைக் கன்று வைத்து அலங்ரித்து வழிபாடு
ஆயுத பூஜையையொட்டி தமிழ்நாடு முழுவதும் தொழில் நிறுவனங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
செய்யும் தொழிலையும், அதற்கு உதவும் உபகரணங்களையும் கடவுளாக நினைத்து ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதன்படி, கோவை இடையர்பாளையம் பகுதியில் செயல்படும் சிறு, குறு தொழிற்கூடங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டின.
நிறுவனங்களில் உள்ள இயந்திரங்களை சுத்தம் செய்தும், மலர் மாலை சூட்டி, வாழைக் கன்று வைத்து அலங்ரித்தனர். இதே போல, மா இலை தோரணம், பலூன்கள் ஆகியவற்றையும் கட்டி தொழிற்கூடம் முழுவதையும் அலங்கரித்திருந்தனர். இதையடுத்து, பழங்கள், சுண்டல், அவல், பொரி உள்ளிட்டவற்றை சாமிக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.
தொழில் நகரமான திருப்பூரில், பின்னலாடை நிறுவனங்களில் இயந்திரங்களை சுத்தம் செய்து, அலங்கரித்து தொழிலாளர்கள் வழிபாடு நடத்தினர். இதேபோல, நாமக்கல்லில், லாரி கூடு கட்டும் தொழில் நிலையங்களிலும் ஆயுத பூஜை களைகட்டியது. நவராத்திரி விழாவின் நிறைவுநாளான இன்று சரஸ்வதி பூஜை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காணும் பொருளில் தோன்றும் கலைமணி சரஸ்வதி தேவியை மக்கள் வணங்கினர்.
Chennai,Chennai,Tamil Nadu
October 11, 2024 10:07 PM IST
