> முதலமைச்சரின் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
உழவர் நல சேவை மையங்களை அமைக்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு 30 சதவிகித மானியமாக 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
> ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில்’ 15 லட்சம் காய்கறி விதைத் தொகுப்புகள், 9 லட்சம் பழச்செடித் தொகுப்புகள் மற்றும் 1 லட்சம் பயறுவகை விதைத் தளைகள் மொத்தம் 25 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.19 கோடி நிதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதனால் போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அவற்றுக்கான தட்டுப்பாடு நேராமல் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
> கடந்த ஐந்து ஆண்டுகளில், இதுவரை சுமார் 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தமுள்ள 23.86 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதற்கென இத்துறையால் இதுவரை ரூ.33,904 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது.
> தமிழ்நாட்டில் கூடுதலாக 3.48 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி கிடைத்துள்ளது.