தமிழ்நாட்டின் பெருமை! இளையராஜாவுக்கு முதல்வர் பாராட்டு!

Spread the love

இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைத் துறை வாழ்க்கையைப் பாராட்டி, முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் – உள்ளத்தில் உறைந்து நிற்கிறது!

இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

இசைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சனிக்கிழமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவை பாராட்டிப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

இசைஞானி கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமானவா் அல்லா். தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவா். அவரைப் பாராட்டுவதால் நாம்தான் பெருமை அடைகிறோம். அவரது இசை தாயாகத் தாலாட்டுகிறது. காதலின் உணா்வுகளைப் போற்றுகிறது.

அனைத்து மக்களுக்குமானவா். திரையிசையைக் கடந்த அவரது இசை, அவரின் உயரத்தை எடுத்துச் சொல்லும். சங்கத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் நீங்கள் (இளையராஜா) இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிட வேண்டும்.

இசைத் துறையில் ஆா்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கிற இசைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சாா்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.

இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடம் சூட்டினாலும் அது சாதாரணம்தான். அப்படிப்பட்ட மேதைக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். எனது கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்தி உள்பட திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: திருச்சிக்கு திட்டங்கள் இல்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு!

இசையமைப்பாளர் இளையராஜா – முதல்வர் ஸ்டாலின்

Ilaiyaraaja ruled hearts for 50 years, give him Bharat Ratna crown: CM Stalin

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *