நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி வருகிறார். அதின் முக்கிய வாக்குறுதிகள் தொகுப்பு…
* நாதக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு தனித்தொகுதி
* தமிழக தேசிய மரமாக பனைமரம் அறிவிக்கப்படும்
* தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள் அறிவிக்கப்படும்
* அனைவருக்கும் அரசு வேலை
* பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை
* தலைமை செயலகம், சட்டமன்றம் உள்ளிட்டவை திருச்சியில் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்படும்
* அரசு பள்ளிகள், கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை
* நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை கடைப்பிடிக்கப்படும்.
* சமூக நீதி, வாழ்வியல், தொன்மம், ஒழுக்கம் முதலியவை தொடக்கப்பள்ளி முதலே கற்றுத்தரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார்.