தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? – தமிழிசை பதில்!

Spread the love

காங்கிரஸ்காரர்கள் ஓட்டுக்காக இன்னும் திமுகவிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா? அல்லது அதிமுக தனித்து ஆட்சியா? என குழப்பம் நீடித்து வருகிறது.

மத்திய உள்துறை அமித் ஷா, கூட்டணி ஆட்சியில் பாஜக பங்குபெறும் என்று கூறவே, ‘அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,

“ஒரு தலைவரை கொச்சைப்படுத்திவிட்டார் என்று திருச்சி சிவா மன்னிப்பு கேட்கவில்லை, அப்படியே விட்டுவிடச் சொல்கிறார். முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலகமூட்டி குளிர்காய நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்கிறார். எனவே, காமராஜருடைய மதிப்பு மீது திமுகவுக்கு அக்கறை இல்லை.

காங்கிரஸ்காரர்கள் ஓட்டுக்காக இன்னும் திமுகவிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைவிட கேவலம் எதுவுமில்லை. மாபெரும் தலைவரை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மிக வேதனையாக ஒன்று. திமுகவும், காங்கிரஸும் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

காமராஜர் பற்றி சொல்வதற்கு வேறு எதுவுமே இல்லையா? காமராஜர் எவ்வளவோ செய்திருக்கிறார். அதையெல்லாம் சொல்லலாமே.

கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி ஆட்சி பற்றி தில்லியில் உள்ள தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதைப்பற்றி நான் எதுவும் சொல்லமாட்டேன்.

‘காவி ஆட்சி’ என்று சொல்கிறார்கள். பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும்போது தெரியவில்லையா? எடப்பாடி பழனிசாமி அதை தெளிவாகச் சொல்லிவிட்டார். அப்பட்டமான ஓட்டு அரசியலை திமுக முன்னெடுக்கிறது” என்று தெரிவித்தார்.

Senior BJP leader Tamilisai Soundararajan has said that Congress with DMK for votes only.

இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? – திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *