தமிழகத்தில் அனல் பறந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் வெப்பத்தினால் தவித்து வருகிறார்கள்.
இதே போல் இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் பெரும்பாலான வீடுகளில் இரவு முழுவதும் ஏ.சி.எந்திரம் ஓடுகிறது. எனினும் புழுக்கத்தால் அல்லல் படும் நிலை நீடித்து வருகிறது. இதற்கிடையே வருகிற 1&ந்தேதி முதல் வெப்பஅலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.
100 டிகிரி வெயில்
இதற்கிடையே நேற்று(29&ந்தேதி) தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்து இருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108.68 டிகிரி பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பதிவான வெயிலின் அளவு வருமாறு-:-&
திருப்பத்தூர் – 107.6
சேலம் – 106.88
வேலூர் – 106.7
கரூர் பரமத்தி – 105.8
தருமபுரி – 104.9
திருச்சி – 104.54
மதுரை விமான நிலையம் – 104.36
திருத்தணி – 104.18
மதுரை, தஞ்சாவூர் – 104
கோவை – 103.64
நாமக்கல் – 102.2
பாளையங்கோட்டை – 101.3
மீனம்பாக்கம் – 100.4