தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

Dinamani2f2025 02 072fljhnmk5c2fmks.png
Spread the love

தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை, நீதியும் இல்லை என நெல்லையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரு நாள் பயணமாக நேற்று (பிப். 6) நெல்லை வந்தார். கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை நேற்று தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ரூ. 180 கோடி மதிப்பிலான புறவழிச்சாலை திட்டம் உள்பட 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும் 20 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாடினார்.

மேலும் நெல்லை மாவட்டத்துக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையும் படிக்க | ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! வீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது!

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை வறண்ட இடங்களான திசையன்விளை, சாத்தான்குளம் பகுதிக்குக் கொண்டு செல்லும் திட்டம், 2 ஆண்டுகளாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க புதிய புறவழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பொருநை ஆற்றின் கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிடப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.

பொருநை அருங்காட்சியகப் பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிந்துவிடும்.

நெல்லையில் மேலும் 2 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.

இதையும் படிக்க | முதல்வர் சந்திக்க மறுப்பு: மாஞ்சோலை மக்கள் போராட்டம்!

பாளையங்கோட்டையில் ஒய் வடிவ ரயில்வே மேம்பாலம், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்,

பாபநாசம் கோயில் வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

மேலப்பாளையம் பகுதியில் அம்பாசமுத்திரம் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை. தமிழகத்திற்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது.

திருநெல்வேலி அல்வாவை விட மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் ஃபேமஸாக இருக்கிறது” என்று பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *