‘தமிழ் காக்க உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்’ – தவெக தலைவர் விஜய் | vijay says that salute to the martyrs of the language struggle who laid down their lives

1348309.jpg
Spread the love

சென்னை: தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம். உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் தினம் ஜன. 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் மொழி உரிமைகளுக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம். தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க!” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *