சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை”. இப்படத்தில் எல்.கே.அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்’ என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,
“லவ் மேரேஜ் படம் ஒன்றரை வருஷம் தாமதமாகிருச்சி. படம் ரிலீஸ் ஆகுறதே பெரிய விஷயம் என்ற மனநிலை வந்துவிட்டது. அந்தப் படத்தில் நான் நடிக்கும் பகுதி படப்பிடிப்பு எல்லாமே 35 நாள்களில் முடிந்துவிட்டது. அந்தப் படம் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் காட்டி படமும் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் காலில் அடிப்பட்டு பெட் ரெஸ்டில் இருந்தேன்.

அந்தப் படம் உருவான பிறகு ஒரே பிரச்னை… ஒரு படம் வெற்றிபெற வேண்டுமென்றால் படம் நன்றாக இருந்தால் மட்டும் போதாது, சரியான நேரத்தில் படம் வெளியாக வேண்டும். சிறை படம் தமிழ் மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவிலிருந்து சிறை மாதிரியான நல்ல படம் வந்திருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. சிறைப் படப்படப்பிடிப்பு எல்லாமே ரியல் லோகேஷனில்தான் எடுத்தோம். முன்பே அனுமதி வாங்கி, கேமராவை மறைத்து வைத்து எடுத்திருக்கிறோம். கஷ்டப்படமால் சினிமா இல்லை. கஷ்டப்பட வேண்டும். அப்போதுதான் அந்த ஒரிஜினாலிட்டி வரும். கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.