“தரம் தாழ்ந்த சொற்கள் பேசுபவரையே வெளிச்சம் போட்டுக்காட்டும்”- நடிகரின் கருத்துக்கு த்ரிஷா கண்டனம் |Trisha Condemns Actor’s Remark

Spread the love

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷா குறித்து நடிகர் ஒருவர் பேசியது சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் த்ரிஷா அதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், ஒரு தனிநபரின் உதவியாளர் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, கடைசி நிமிடத்தில் என் பெயரும் புகைப்படமும் சேர்க்கப்பட்டதாக அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

ஒருவரிடம் மைக் இருந்தால் அவர் பேசுவது புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ ஆகிவிடாது. அது முட்டாள் தனத்தைத் தான் வெளிப்படுத்தும்.

அறிவற்று பேசும் தரம் தாழ்ந்த வார்த்தைகள் யாரை நோக்கி பேசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரையே அதிகம் வெளிச்சம் போட்டுக்காட்டும்.” என்று த்ரிஷா அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *