தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

dinamani2F2025 08 172Flu7ng1gv2Fstalin74
Spread the love

தருமபுரியில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.512.52 கோடி மதிப்பிலான 1,044 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து ரூ.362.77 கோடி மதிப்பில் 1,073 முடிவுற்ற திட்டங்களையும் தொடக்கி வைத்தார்.

சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர், சனிக்கிழமை இரவு தருமபுரியை வந்தடைந்தார்.

இதைத் தொடர்ந்து, கூட்டுறவுத் துறை சார்பில், விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் பெறும் திட்டத்தை அதியமான் கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 17) தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பிஎம்பி கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர், இந்நிகழ்ச்சியில் ரூ. 512.52 கோடி மதிப்பில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 362.77 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான, இணைப்பு சக்கரங்கள் பொருத்திய வாகனங்களை வழங்கி, வேளாண் கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்… நாய் படும் பாடு!

At a government function in Dharmapuri, Chief Minister M.K. Stalin laid the foundation stones for 1,044 new projects worth Rs. 512.52 crore.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *