தருமபுரி மாவட்டம், நெருப்பூர் குகை நரசிம்மர் கோயில் : சுயம்புத் திருமேனி; நோய் தீர்க்கும் தலம்! | neruppur narasimha swamy temple

Spread the love

குகையின் மேற்புறச் சுவரில் நிறைய வெளவால் களைக் காணமுடிகிறது. விழா காலங்களில் அதிர் வேட்டுகள் வெடிக்கப்படும்போதும், மேள-தாளங்கள் அதீத ஓசை எழுப்பும்போதும்கூட இந்த வெளவால்கள் குகையைவிட்டு வெளியேறுவது இல்லையாம். அதேநேரம் பக்தர்களுக்கும் தொந்தரவாக இருப்பது இல்லை என்கிறார்கள்.

இவற்றையும் தெய்வ வடிவாகவே பார்க்கிறார்கள் பக்தர்கள். தங்களின் மூதாதையரே இவ்வாறு வெளவால்களின் உருவில் இங்கு வந்து, நரசிம்மரை தியானித்து தவம் இருப்பதாக நம்புகிறார்கள் உள்ளூர் பக்தர்கள். குழந்தைப் பாக்கியம் கிட்டாத தம்பதியர் இங்கு வந்து மனதார வணங்கி வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்குமாம்.

நெருப்பூர் குகை நரசிம்மர் கோயில்

நெருப்பூர் குகை நரசிம்மர் கோயில்

ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை தினத்தில் சுவாமி திருவீதியுலா காண்கிறார். அப்போது சுவாமி வரும் பாதையில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தரையில் நெடுஞ் சாண் கிடையாக படுத்துக்கொள்கின்றனர்.

சுவாமியைச் சுமந்து வரும் கோயில் பூசாரி, அவர்களை தாண்டிச்சென்று ஆசி வழங்குகிறார். இதனால் துன்பங்கள், பிரச்னைகள் அனைத்தும் விலகி நன்மைகள் சேரும்; நோய்நொடிகள் நீங்கும்; திருமணம் ஆகாதவர்களுக்குத் தடைகள் அகன்று விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதிகம்.

நரசிம்ம பெருமாளை வழிபடுவதே மிகுந்த மன அமைதியைத் தரும். அதுவும் இப்படி இயற்கை சூழல் அழகுறத் திகழும் இந்தத் தலத்தில் அருள்பாலிக்கும் சுயம்பு நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் வாழ்க்கை நலமாகும் வளமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *