இவரது தலைமையின்கீழ், பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த இடங்களில் நூறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பாட்னாவிலுள்ள அனுமன் கோயில், ஹாஜிபூரிலுள்ள ராம் சௌரா ஆலயம், புத்த கயாவிலுள்ள ஜகந்நாதர் ஆலயம், வைஷாலியிலுள்ள சதுர்முக மகாதேவர் ஆலயம், முஸாஃபரிலுள்ள கரீப் நாதர் ஆலயம் உள்பட பல கோயில்கள் அவற்றுள் அடக்கம்.
இவரது திறன்மிகு நிர்வாகத்தால் ஆயிரக்கணக்கான கோயில்கள் புனரமைக்கப்பட்டதுடன், கோயில் நிலப் பகுதிகள் ப்ளாட் போட்டு விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, பிகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா பகுதியில் ரூ. 500 கோடியில் ‘ராமாயண கோயில்’ எழுப்பப்பட்டதற்கு இவரது முயற்சியே முக்கிய காரணமாகும்.