‘தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!’- பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை| tamilnadu congress leader selvaperundhagai press meet

Spread the love

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

திமுக - காங்கிரஸ்

திமுக – காங்கிரஸ்

இந்நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று மேற்கொள்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அண்ணா அறிவாலயத்திற்கு செல்லவில்லை. பேச்சுவார்த்தை தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க தான் செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல் வெளியானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *