“தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்பது எங்கள் வாழ்நாள் பெருமை” – ஐரோப்பிய ஆணையத் தலைவர் | “Participating as chief guests is the pride of our lives” – President of the European Commission.

Spread the love

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்றனர்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உர்சுலா வான் டெர் லேயன், குடியரசு நிகழ்வின் அரச விருந்தினராக கலந்துகொண்டார்.

உர்சுலா வான் டெர் லேயன் - மோடி

உர்சுலா வான் டெர் லேயன் – மோடி

மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

எனவே, இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் உர்சுலா வான் டெர் லேயன், “குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்பது எங்கள் வாழ்நாள் பெருமை. வெற்றிகரமான இந்தியா உலகை மேலும் நிலையானதாகவும், செழிப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. இதனால் நாம் அனைவரும் பயனடைகிறோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *