“இல்ல. `ஒரு ஒன்பதரை மணி நேரம் பேசினீங்கன்னு சொன்னதே எனக்கு மிரக்களா இருந்துச்சு. என்னை பற்றி நீங்க பதிவிடுவது எல்லாம் நான் பார்த்துட்டேதான் இருக்கேன். உங்க தமிழ், உங்களுடைய குரல் எல்லாரையும் வசீகரிக்கிறது. அதுலையும் என்னுடைய கட்சியில் இருக்கக்கூடிய வாலிபர்களை ரொம்ப ஈர்த்துருக்கீங்க. நீங்க ரொம்ப நல்ல நேரத்தில் வந்திருக்கீங்க. ஒரு போர் களத்துக்கு போகிற நேரத்தில் வந்திருக்கீங்க எனக்கு நல்ல உதவியா இருப்பீங்கன்னு’ சொன்னார்.”
“யாரையும் ஒருமையில பேச வேண்டாம். கட்சியினுடைய கொள்கை கோட்பாடுகளை சொல்லுங்க. எல்லோருக்கும் எல்லாம் என்றிருப்பதான் உலகம் நோக்கிய பயணம். ஒரு சமத்துவ உணர்வு. ஒரு சமூக நல்லிணக்கம். ஒரு சமய சகிப்பு தன்மை. பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் இதான் நம்முடைய கொள்கையா வச்சிருக்கோம். இதை கொண்டு போய் பேசினாலே அது உங்க ஸ்டைல்ல பேசினா நல்லா எடுபடும். பேசுங்க கட்சியை கட்டமைக்கறதுக்கு உருதுணையாக இருங்க னு சொன்னார்.
“கரூர் துயரத்திற்கு பிறகு சிபிஐ விசாரணை வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தவெக ஒரு மனு போட்டதற்கு பிறகு, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட அன்று, ஒரு பத்திரிகைக்கு ஒரு பேட்டி கொடுத்தேன்.
இது தவெக-வுக்கு கிடைத்த வெற்றி. கையறு நிலையில் கை பிசைந்து கைவிடப்பட்ட மனநிலையில் இருக்கிற தவெகவுக்கு அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஒரு புதிய வாசலை திறந்து வைத்திருக்கிறது, அப்படின்னு சொன்னதும் அறிவாலயத்தில என் மேல கோபப்பட்டாங்க.
தவெகன்னு ஒரு அமைப்பு இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறாங்க. பழனிசாமிக்கும், திமுக-வுக்கும் தான் போட்டிங்கிறது மாதிரி காமிக்க முயற்சிக்குறாங்க. தவெக்காவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டின்னு நான் சொன்னேன். அது அவங்களால ஜீரணிக்க முடியல. அதனால எதிர்வினை ஆற்று தொடங்கினாங்க.
நான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்தாங்க. வள்ளுவர் கோட்டத்தில் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தக வெளியீட்டு விழாவும், ஒரு பத்து அமர்வுகள் கொண்ட இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. அதில் எனக்கு அழைப்பில்லை. ஒரு பொதுக்கூட்டத்திலேயே என்ன நான் பெரிதும் மதிக்கிற பேராசிரியர் சுப.வீ என்னை விமர்சித்து பேசினார்.
கருர் பழனியப்பன் நான் கலந்து கொண்ட கூட்டத்திலே என்ன நக்கல் செய்து நையாண்டி செய்து பேசினார். மரியாதை இல்ல சுத்தமா இல்ல. அது மட்டும் காரணம் அல்ல லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்ட ஒரு அமைப்பில இயங்குவது எனக்கு இளமை திரும்பும்.”