தவெகவின் “ஒரே’ கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் கட்சி வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என ஒரு செய்தியை அக்கட்சியின் தலைவர் முஸ்தபாவின் விளக்கத்தோடு வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியானவுடன் அவர் மேலும் அதுசார்ந்து விளக்கம் அளிக்க விரும்புவதாக நம்மை தொடர்புகொண்டார்.
முஸ்தபா கூறியதாவது, ‘அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம். ஆவடி நாசர், ஆளுர் ஷாநவாஸ் என இஸ்லாமியர்களுக்கு எதிராகவே எங்கள் கட்சி ஆட்களை நிறுத்தி, ஒரு இஸ்லாமியரும் இன்னொரு இஸ்லாமியரும் மோதிக்கொள்ளும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. இஸ்லாமியர்களுக்குள் சகோதர யுத்தம் வேண்டாம் என நினைக்கிறோம்.