‘தவெகவின் ஒரே ஒரு கூட்டணி கட்சியும் தேர்தலில் போட்டியில்லை!’ |TVK Left Without Allies for Elections – Has Vijay Been Taken by Surprise?”

Spread the love

`என்னணே சொல்றீங்க’ என மேற்படி விசாரிக்கையில், ‘முஸ்தபா மிக தெளிவாக இருக்கிறார். இந்தத் தேர்தலில் தவெகவால் என்ன செய்ய முடியும்? ஆட்சியைப் பிடித்து விடமுடியுமா என்கிறார். அதிகபட்சம் 10-15% வாக்குகளை வாங்குவீர்கள். இதற்காக கூட்டணி சீட்டுகளை வாங்கிக் கொண்டு போய் நான் செலவு செய்து தோற்பேன் என்று தெரிந்தே தோற்பதா? அது முட்டாள்த்தனமாக இருக்கும்.

அதனால் என் கட்சி போட்டியிடவில்லை. யாருக்காவது சீட் வேண்டுமான்றால் சொல்லுங்கள் தலைமையிடம் பேசி நல்லபடியாக முடித்து தருகிறேன் என இளநீர் வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அவர் பேசுவதைப் பார்த்தால் பாசிட்டிவாக இருக்கும் எங்களுக்கு கூட கிலியாக இருக்கிறது’ என வருந்துகின்றனர் பனையூரின் முக்கிய நிர்வாகிகள்.

உடனடியாக முஸ்தபாவை தொடர்புகொண்டு விஷயத்தை கேட்டோம் நான்கைந்து விநாடிகள் யோசித்துவிட்டு, ‘தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைத்தவுடன் பேசுவோம்’ என்றார்.

‘அலர்ட்’ ஆறுமுகமாக இருக்கிறாரே!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *