தவெகவுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? – ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜக

Spread the love

`என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேறினால்…’

அடுத்த தேர்தலே வந்துவிட்டது. மக்களை நாம் எப்படி எதிர்கொள்வது ? அவர்களுக்கு `லாட்டரி’ மார்ட்டின் குரூப் முக்கியம் என்றால் நாம் தனித்துப் போட்டியிடுவோம்’ என்று புலம்பித் தீர்த்திருக்கிறார்.

அதையடுத்து இரவோடு இரவாக தனியார் விடுதியில் காத்திருந்த பா.ஜ.க-வினரை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், முதல்வரின் கருத்தைக் கூறினார்கள்.

ஆனால், `லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணியில்தான் இருக்கும்’ என்று ஆவேசமாகக் கூறியது பா.ஜ.க தரப்பு. அதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை முடியாததால் இரண்டு தரப்பும் ஏக டென்ஷனில் இருக்கின்றன.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி

இந்த நிலையில், `பா.ஜ.க-வுடனான கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன ? கூட்டணியில் தொடர்கிறீர்களா ?’ என்ற கேள்வியுடன் என்.ஆர்.காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபாலிடம் பேசினோம். அதற்கு, `தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ல.ஜ.க வருவதை என்.ஆர்.காங்கிரஸ் விரும்பவில்லை.

பா.ஜ.க அந்த விவகாரத்தில் உறுதியாக இருந்தால், எங்கள் தலைவருடன் ஆலோசனை செய்து அடுத்தக்கட்டம் குறித்து முடிவெடுப்போம்’ என்றார். தொடர்ந்து, `த.வெ.க-வுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா ?’ என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, `அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன’ என்று முடித்துக் கொண்டார். இதுகுறித்துப் பேச பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், `அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக’ கூறியது அவரது செல்போன்.

என்.ஆர்.காங்கிரஸுடனான மோதலால், `என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேறினார் என்றால் நாங்கள் போட்டியிடவே மாட்டோம்’ என்று பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். அதையடுத்து ரங்கசாமியை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகிறது பா.ஜ.க தரப்பு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *