தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தார். தவெகாவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.