தவெக: "இதற்கு பதில் கூறினால் பிரச்னைகள் வரும்!" – செங்கோட்டையன்

Spread the love

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய், தவெக கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் என இரண்டு பதவிகளை வழங்கியிருக்கிறார்.

விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன்
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன்

இந்நிலையில் இன்று( நவ.28) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திருக்கிறார் செங்கோட்டையன். அப்போது பேசிய அவர், ” ஈரோடு சுற்றுப்பயணம் தொடர்பாக விரைவில் விஜய்யுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

மக்கள் மத்தியில் தமிழகத்தைப் புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

இதன் மூலமாக 2026ல் மக்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வார்” என்று கூறியிருக்கிறார். அதிமுகவில் இருந்து இன்னும் சிலர் தவெகவிற்கு வருவார்களா? என்ற கேள்விக்கு, “பதில் கூறினால் பிரச்னைகள் வரும்.

விஜய், செங்கோட்டையன்
விஜய், செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டத்தில் சில சொந்த பணிகள் இருக்கிறது. மீண்டும் சென்னை வந்த பின் விஜய்யிடம் ஒப்புதல் பெற்று சுற்றுப்பயணம் குறித்து முடிவு எடுக்கப்படும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழ்நாடு முன்னேற அயராது உழைப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *