ஒருபுறம் 10 கட்சி கூட்டணி. மற்றொரு புறம் 8 கட்சி கூட்டணி. ஆனால் யாரை எல்லோரும் தேடித்தேடி வருகிறார்கள் என்று சொன்னால் தவெக விஜய்யைத் தான்.
எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.
விஜய்க்கு தானாகவே கூட்டணி அமையும். அப்படி கூட்டணி அமைந்தால் 234 தொகுதிகளிலும் தவெகதான் வெல்லும்.
விஜய் யாரை நிற்க வைக்கிறாரோ அவர்கள் தான் வெல்வார்கள். தவெகவை தவிர யாராலும் தமிழகத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற வரலாற்றைப் படைப்போம்.
அந்தக் காலத்திற்காகத் தான் எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.