தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: கரூரில் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ | karur stampede cbi starts enquiry

1380117
Spread the love

கரூர்: கரூர் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை சிபிஐ அதி​காரி​களிடம் சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் நேற்று ஒப்​படைத்​தனர். இதையடுத்​து, இந்த வழக்​கில் சிபிஐ அதி​காரி​கள் உடனடி​யாக விசா​ரணையை தொடங்​கினர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதன்​பேரில், ஐ.ஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது. கடந்த 5-ம் தேதி கரூர் வந்த இக்​குழு​வினர் சம்பவ இடத்தை பார்​வை​யிட்​டதுடன், மருத்​து​வம், மின்​வாரி​யம் உள்​ளிட்ட பல்​வேறு துறை அதி​காரி​களிடம் விசா​ரணை நடத்​தினர். மேலும், கைது செய்​யப்​பட்ட தவெக நிர்​வாகி​கள் 2 பேரை​யும் 2 நாள் காவலில் எடுத்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதற்​கிடையே, உச்ச நீதி​மன்​றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த 13-ம் தேதி உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்​து, ஐபிஎஸ் அதி​காரி பிர​வீன்

​கு​மார் தலை​மை​யில் ஏடிஎஸ்பி முகேஷ்கு​மார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அடங்​கிய சிபிஐ அதி​காரி​கள் நேற்று முன்​தினம் இரவு கரூர் வந்​தனர். கரூர் பொதுப்​பணித் துறை​யின் சுற்​றுலா மாளி​கை​யில் தங்​கி​யிருந்த அவர்​களிடம், சிறப்பு புல​னாய்​வுக் குழு ஏடிஎஸ்பி திரு​மால், வழக்கு ஆவணங்​களை ஒப்​படைத்​தார். இதை தொடர்ந்​து, பல்​வேறு துறை அரசு அலு​வலர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணையை தொடங்​கினர்.

சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர், கரூர் பொதுப்​பணித் துறைக்கு சொந்​த​மான நீர்வள ஆதா​ரத் துறை திட்ட இல்​லத்​தில் தங்​கி​யிருந்​து​தான் விசா​ரணை மேற்​கொண்டு வந்​தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​பட்​டதை தொடர்ந்​து, புல​னாய்​வுக் குழு​வில் இருந்த அதி​காரி​களில் பெரும்​பாலானோர் புறப்​பட்​டுச் சென்ற நிலை​யில், ஒரு சிலர் மட்​டும் தங்​கி​யிருந்​தனர்.

ஆவணங்​கள் எரிப்பு: இந்த அலு​வல​கத்​தின் தெற்கு பகு​தி​யில் 3 இடங்​களில் சில ஆவணங்​கள் தீயிட்டு எரிக்​கப்​பட்​டிருந்​தது நேற்று தெரிய​வந்​தது. மேலும், 32 ஜிபி கொள்​ளவு கொண்ட பென்​-டிரைவ் ஒன்​றும் சேதமடைந்து கிடந்​துள்​ளது. இதை செய்​தி​யாளர்​கள் வீடியோ, புகைப்​படம் எடுத்​ததை தொடர்ந்​து, சேதமடைந்த பென்​-டிரைவை சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் எடுத்​துச் சென்​றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *