தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன? | Thaweka: Salem Vijay meeting; 51 conditions; 5,000 people allowed; What does Sengottaiyan say?

Spread the love

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெக-வினர் போலீஸில் மனு அளித்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு போலீஸார் தரப்பில் இருந்து அனுமதி கொடுக்காமல் இருந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 13-ஆம் தேதி சேலத்தில் பொதுமக்கள் சந்திப்புக் கூட்டமாக இல்லாமல் தவெக நிர்வாகிகளுடனான சந்திப்புக் கூட்டமாக நடத்த அனுமதி அளிக்குமாறு தவெக தரப்பில் இருந்து போலீஸாரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதைப் பரிசிலித்த போலீஸார் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து, சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து-நடராஜன் திடலில் பிப்ரவரி 13-ஆம் தேதி விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தவெக மாநாடு

தவெக மாநாடு

51 நிபந்தனைகள்…

இந்தக் கூட்டத்துக்கு தவெக-வினருக்கு போலீஸ் தரப்பில் இருந்து 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விஜய் வேனில் நின்றபடிதான் பேச வேண்டும், தவெக நிர்வாகிகளுக்கு இருக்கைகள் போடப்படாது, இக்கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், இக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும், குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை போன்ற 51 நிபந்தனைகளை போலீஸார் விதித்துள்ளனர்.

இந்நிலையில், நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து – நடராஜன் திடலில் நடைபெற்று வரும் பணிகளை தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சேலத்தில் விஜய்யுடனான நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு காவல்துறை விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றி உள்ளோம். இந்தக் கூட்டத்துக்கு வருகை தரும் மக்கள் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *