தவெக: திருச்சி கிழக்கை டிக் அடித்த விஜய்; காரணம் என்ன தெரியுமா? | Tvk: Vijay selected Trichy East; Do you know the reason?

Spread the love

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் ஒன்று திருச்சி கிழக்கு தொகுதி. திருச்சி மாநகரின் மையத்தில் அமைந்திருக்கும் இந்தத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் இருந்து வருகிறார். 

மறுபடியும் அவர்தான் தி.மு.க சார்பில் வேட்பாளர். இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற அறிவிப்பால், இந்தத் தொகுதி லைம்லைட்டுக்குள் வந்திருக்கிறது.

இந்நிலையில், அவர் ஏன் திருச்சி கிழக்கைத் தேர்ந்தெடுத்தார் என்று விசாரித்தோம்.

“திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள தொகுதி, கிராம பகுதிகள் இல்லாத தொகுதி, சிறிய தொகுதி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று சிறுபான்மையினர் அதிகம் நிறைந்த தொகுதி என்பதால், “இங்கு நின்றால் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. செலவு அதிகம் செய்ய வேண்டியதில்லை. எளிதாக ஜெயிக்கலாம்’ என்று திராவிடக் கட்சிகளில் பொதுவாக இந்தத் தொகுதியைப் பெற போட்டா போட்டி இருக்கும். அதேபோல்தான், விஜய் இந்தத் தொகுதியை விரும்பியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *