தவெக பொதுக்கூட்டத்தில் நடந்தது விபத்து: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கருத்து  | Karur Stampede is as accident says AC Shanmugam

1379459
Spread the love

திருவண்ணாமலை: கரூர் தவெக பொதுக்​கூட்​டத்​தில் நிகழ்ந்த சம்​பவம் ஒரு விபத்​து. இதற்கு சிபிஐ விசா​ரணை கோரு​வது அர்த்​தமற்​றது என்று புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம் தெரி​வித்​தார்.

ஆரணி​யில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் நேற்று கலந்​து​கொண்ட புதிய நீதிக்​கட்​சி​ தலை​வர் ஏ.சி.சண்​முகம், செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: கரூரில் தவெக பொதுக்​கூட்​டத்​தில் 10 ஆயிரம் பேர் கூடவேண்​டிய இடத்​தில் 30 ஆயிரம் பேர் கூடிய​தால் 41 பேர் உயி​ரிழந்த அசம்​பா​விதம் நடந்​தது. இதற்கு விஜய்​யின் கால​தாமத​மும் ஒரு காரணம். திரண்​டிருந்த மக்​கள் 6 மணி நேரம் தண்​ணீர்​கூட இல்​லாமல் தவித்​துக் கொண்​டிருந்​தனர். அப்போது, விஜய்​யின் வாக​னம் உள்ளே வந்​த​தால் நெரிசல் அதி​க​மாகி இந்த விபத்து ஏற்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாட்​டில் இது​போன்ற சம்​பவம் இனி நிகழக்​கூ​டாது. உயி​ரிழந்த குடும்​பங்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கின்​றேன். இந்த விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணை கோரு​வதற்கு அர்த்​தமே இல்​லை. இதனை யாரும் திட்​ட​மிட்டு செய்​ய​வில்​லை. தற்​செய​லாக நடை​பெற்​றது. இனி வரும் காலங்​களில் சாலை​யில் மக்​களை சந்​திக்​காமல், மைதானத்​தில் பொதுக்​கூட்​டம் நடத்​துமாறு கட்​சிகளுக்கு தமிழக அரசு உத்​தர​விட வேண்​டும்.இவ்​வாறு அவர் கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *