சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் மாநாட்டிற்குப் புறப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக, விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும், தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றதாகவும், இரு இளைஞர்களும் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | தவெக மாநாடு: வெய்யிலையும் பொருட்படுத்தாது குவியும் தொண்டர்கள்!