தவெக மாநாட்டிற்கு அனுமதி வேண்டுமா? இந்த 21 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க – காவல்துறை | Breaking and Live Updates

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை தொடங்கி உள்ள நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் வருகின்ற 23-ம் தேதி நடத்த திட்மிட்டுள்ளார். மாநாடு நடைபெறுவதற்கு 85 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யபட்டு மாநாடு நடத்த அனுமதி கோரி கடந்த 28-ம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு ஆறு நாட்களை கடந்த நிலையில் விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளர் மூலமாக மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுசெயலாளர் புஸ்சி.ஆனந்துக்கு அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தில் கேட்கபட்டுள்ள கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் விளக்கமளித்த பின் மாநாட்டிற்கான அனுமதி அளிக்கபடுமா, மறுக்கப்படுமா என்பது தெரியவரும். மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் நீண்ட இழுபறியானது நிலவி வருகிறது. ஏற்கனவே மாநாட்டிற்கான அனுமதியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஆராய்ந்து தெரிவிப்பார் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக மாநாடு தொடர்பாக காவல்துறையால் கேட்கப்பட்ட 21 கேள்விகள் விவரம்:

1.மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடியும்?

2.நிகழ்ச்சிகளின் விபரம் என்ன?

3.மாநாட்டு நடக்கும் இடத்தின் உரிமையாளரிடம் பெற்ற அனுமதி கடிதம்.

4.மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்களின் பட்டியல்.

5.எத்தனை நாற்காலிகள் போடப்படுகின்றன.

6.எத்தனை பேனர்கள் அலங்கார வளைவுகள் வைக்கப்பட உள்ளன.

7.பந்தல் ஒலிபெருக்கி வைக்கப்படுகின்றன. ஒப்பந்ததாரர் பெயர் என்ன?.

8.எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்?. ஆண், பெண், முதியவர்கள் விபரம் என்ன?

9.எந்தெந்த மாவட்டத்திலிருந்து யாருடைய தலைமையில் வருவார்கள்?,

10.எத்தனை வாகனங்கள் என்னென்ன வகையில் வருகின்றன?.

11.வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடு மற்றும் அவ்விடத்தின் உரிமையாளர் பெயர் விபரம்.

13.மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?.

14.குடிதண்ணீர், கழிப்பிட வசதிகளுக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

15.உணவு பொட்டலங்கள் மூலம் உபயோகிக்கப்படுகிறதா அல்லது சமையல் கூட மூலம் சமைத்து விநியோகப்பட உள்ளதா?.

16.தீ விபத்து ஏற்படுமாயின் தவிர்க்கப்பட எடுத்துள்ள நடவடிக்கை என்ன?.

17.மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் ஏற்பாடு என்ன?.

18.மாநாட்டில் உள்ளே, வெளியே செல்லும் வழித்தடம் என்ன?.

19.முக்கிய நபர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளே செல்லும் வழித்தடம் என்ன?.

20.மின்சாரம் எந்த வகையில் எடுக்கப்படுகிறது?.

21.வாகன நிறுத்தங்களின் வழித்தடம் என்ன?.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *