தவெக முதல் மாநில மாநாட்டின் உறுதிமொழிகள் ஏற்பு

Dinamani2f2024 10 272fp2z4sd772fvijay1.jpg
Spread the love

தவெக மாநாட்டின் உறுதிமொழிகள்

மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடக்கமாக தவெக பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழிகளை வாசித்தார்.

“நமது நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து, வீரத்துடன் போராடி, உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்;

நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த, மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில், தொடர்ந்து பாடுபடுவேன்;

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்;

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகனாக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்;

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்;

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *