`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' – அண்ணாமலை பதில்

Spread the love

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யைப் பொறுத்தவரை நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கின்றேன்.

தவெக - விஜய்
தவெக – விஜய்

அதிகாரப்பூர்வமாக இந்த கட்சியினுடைய தலைவர் நயினார் நாகேந்திரன். அவர் இது போன்ற பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

என்னைப் பொறுத்தவரை டீயும், காபியும் எப்போதும் ஒன்று சேராது என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன், காரணம் சித்தாந்தங்கள் வேறு.

ஆனால் இன்றைக்கு ஊடக நண்பர்கள் உங்களுடைய யூகத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் இன்றைக்கு வலிமையாக இருக்கிறோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது, தேர்தலைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறோம்.

பெரும் வெற்றியை நாங்கள் பெறுவோம் என்கின்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *