தாக்கி வீடியோ எடுத்து மிரட்டல்; தற்கொலை செய்த அதிகாரி: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் ராஜினாமா!

Spread the love

இதையடுத்து கடந்த 13ம் தேதி அமைச்சரின் இல்லத்திற்கு ககன்தீப் வரவழைக்கப்பட்டு, அங்கு அவர் தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக”பொய் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் ககன்தீப் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆனால் இக்குற்றச்சாட்டை லால்ஜித் சிங் மறுத்துள்ளார். நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு தன் மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது மற்றும் பொய்யானது என்று குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,”‘எங்கள் கட்சி எப்போதும் உண்மைக்கு ஆதரவாக நிற்கிறது. நியாயமான விசாரணையை உறுதி செய்வதில் எனது பதவி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக எனது ராஜினாமாவை ஏற்குமாறு எனது கட்சியையும் முதல்வரையும் கேட்டுக்கொள்கிறேன். உண்மை வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். ஆனால் இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பர்தாப் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “லால்ஜித் சிங் மீது கொலை வழக்கு பதிவு செய்து லால்ஜித் சிங் புல்லரை கைது செய்ய வேண்டும். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *