தாத்தியம்பட்டி: `எத்தனை முறை மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை…’ – சாலை சீரமைப்பு கோரும் மக்கள்

Spread the love

அப்பகுதி மக்கள் அளித்த மனுக்கள் எல்லாம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது என்ற பதிலே அரசு அலுவலர்கள் அளிக்கும் பதிலாக உள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள்,

“சாலை வேண்டி நாங்கள் அளித்த மனுக்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மட்டும் இடித்து புதிய கட்டடங்கள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகின்றது.

தாத்தியம்பட்டி சிக்கனம்பட்டி கிராமங்களுக்கான `உங்களுடன் ஸ்டாலின் முகாம்” 13.11.2025 அன்று நடைபெற்றது. அங்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயம் என்பதால் நிச்சயம் கோரிக்கை நிறைவேறும் என ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்கின்றனர்.

ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இது குறித்து கேட்டபோது,

“கூடிய விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌‌. முதல்வர் பிரிவிலும் இந்த மனு பெறப்பட்டுள்ளது. ஆதலால் விரைவில் சாலை அமைப்பதற்கான முன்மொழிவு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, சாலை அமைத்து தரப்படும்” எனக் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *