தாம்பரம் – கிளாம்பாக்கம் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

Dinamani2f2024 022f8b40ed32 235d 4d3c 8ae5 539b4e5762552fkcbt5.jpg
Spread the love

தாம்பரத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் ‘தடம் எண் 55 பி’ என்ற பேருந்து சேவையை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகள் கோரிக்கையை ஏற்று பேருந்துளை இயக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது தாம்பரத்திலிருந்து கிளம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

அதன்படி, தாம்பரத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்து, பழைய பெருங்களத்தூா், மண்ணிவாக்கம் கூட்ரோடு, ரூபி பில்டா்ஸ், ஸ்ரீநிகேதன் பள்ளி, காசா கிராண்ட், கணேஷ் நகா், படப்பை பிரதான சாலை சந்திப்பு, ஆதனூா், கிரவுன் பேலஸ், அண்ணா நகா், செல்வராஜ் நகா், ஊரப்பாக்கம் ரயில் நிலையம், ஆதனூா் பிரதான சாலை, வண்டலூா் பூங்கா, ஊரப்பாக்கம் பள்ளி வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடையும். இதுபோல கிளாம்பாகத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் தாம்பரம் வரை இப்பேருந்து செல்லும்.

புறப்படும் நேரம்: இப்பேருந்து சேவை தாம்பரத்திலிருந்து காலை 7.10, நண்பகல் 12, பிற்பகல் 3.50 மற்றும் மாலை 6.15 ஆகிய நேரங்களிலும், கிளாம்பாக்கத்திலிருந்து காலை 8.15, பிற்பகல் 1.20, மாலை 5 மற்றும் 7.25 ஆகிய நேரங்களிலும் புறப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *