தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது பாதை திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் | Railway Ministry approves Tambaram to Chengalpattu 4th line project

Spread the love

சென்னை: தாம்​பரம் – செங்​கல்​பட்டு இடையே ரூ.757.18 கோடி​யில் 4-வது ரயில் பாதை திட்​டத்​துக்கு ரயில்வே அமைச்​சகம் ஒப்புதல் அளித்​துள்​ளது. சென்னை எழும்​பூரில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் பெரும்​பாலான ரயில்​கள் செங்​கல்​பட்டு வழி​யாக செல்​கின்​றன. தினசரி 60-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​களும், 200-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன.

ஆனால், இத்​தடத்​தில் 3 பாதைகள் மட்​டுமே உள்​ளன. கூடு​தல் ரயில்​களை இயக்க வசதி​யாக, 4-வது புதிய ரயில் பாதை அமைக்​கும் திட்​டத்​துக்கு விரி​வான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே அமைச்​சகத்​திடம் தெற்கு ரயில்வே வழங்​கியது.

இந்​நிலை​யில், தற்​போது இத்​திட்​டத்​துக்கு ரயில்வே அமைச்​சகம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதுகுறித்​து, தெற்கு ரயில்வே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தாம்​பரம் – செங்​கல்​பட்டு இடையே 30 கி.மீ. தொலை​வு ரூ.757.18 கோடி​யில், 4-வது பாதை அமைக்க திட்​டம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்​துக்கு ரயில்வே அமைச்​சகம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

சென்னை கடற்​கரை முதல் கன்​னி​யாகுமரி வரையி​லான வழித்​தடத்​தில், தாம்​பரம் – செங்​கல்​பட்டு பிர​தான பாதை. இந்த வழித்​தடத்​தில் மின்​சார ரயில்​களும், விரைவு ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன. தற்​போது, இத்​தடத்​தில் பயணி​களின் பயன்​பாடு 87 சதவீத​மாக உள்​ளது, 4-வது ரயில்​பாதை திட்​டம் நடை​முறைக்கு வரும்​போது, பயணி​களின் பயன்​பாடு 136 சதவீத​மாக உயரும்.

பயணி​கள் நெரிசல் குறை​யும். இது, மின்​சார ரயில் சேவையை செங்​கல்​பட்டு வரை​யில் நீட்​டிக்​க​வும் உதவும். தாம்​பரம், கூடு​வாஞ்​சேரி, செங்​கல்​பட்​டு, ஸ்ரீபெரும்​புதூர் ஆகிய பகு​தி​களில் அதி​கரிக்​கும் குடி​யிருப்​பு​கள் மற்​றும் தொழிற்​சாலைகளுக்கு இந்த திட்​டம் வரப்​பிர​சாத​மாக அமை​யும். மேலும், தென் மாவட்​டங்​களுக்கு செல்​லும் பயணி​களுக்​கும் பெரிதும் உதவும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பயணி​கள் வரவேற்பு: புதிய வழித்தட திட்​டத்​துக்கு ரயில்வே அமைச்​சகம் ஒப்​புதல் அளித்​ததற்கு, ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *