தீபாவளி விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சற்று முன் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயில் (20691) தாம்பரத்திலிருந்து இன்றிரவு 11 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தாம்பரம் – மங்களூரு செண்ட்ரல் விரைவு ரயில் (20691) தாம்பரத்திலிருந்து இன்றிரவு 11.50 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.50 மணிக்குப் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.