தாயாகிறார் கத்ரீனா கைஃப்..! கணவருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி!

dinamani2F2025 09 232Fqajmaido2Fkatrinakaif175861148437278257802199695353562982855
Spread the love

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தாய்மைப்பேறு அடைந்துள்ளார். இந்தத் தகவலை கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷால் தம்பதி சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நட்சத்திர தம்பதியின் திருமணம் ராஜஸ்தானிலுள்ளதொரு நட்சத்திர விடுதியில் கடந்த 2021-இல் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் பெற்றோர் ஆக உள்ளனர்.

katrinakaif 1739594888 3568303012184456177 3562982855

தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து இன்று(செப். 23) கத்ரீனா கைஃப் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் வாழ்க்கையில் சாலச்சிறந்த சகாப்தத்தை தொடங்க ஆயத்தமாகியுள்ளோம். எங்கள் மனம் மகிழ்ச்சியாலும் அன்பாலும் நிரம்பியுள்ளது’ என்று குறிப்பிட்டு தனது கணவர் விக்கி கௌஷாலுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டு தான் தாய்மைப்பேறு அடைந்துள்ளதை ம்கிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு அக்டோபர் அல்லது நவம்பரில் குழந்தை பிறக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

katrinakaif 1758611484 3727825780219969535 3562982855

கத்ரீனா கைஃப் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. கத்ரீனா கைஃப்புடன் விஜய் சேதுபதி முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்தப் படம் கடந்தாண்டு ஜனவரியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

katrinakaif 1741944089 3588009539409304398 3562982855

Katrina Kaif, Vicky Kaushal announce pregnancy

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *